என்னைப் பற்றி...
நான் எம்மெஸ். எம்.எஸ். சலீம் என்னுடைய முழுப்பெயர். என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி.
என்னுடைய ஆரம்பநிலை கல்வியை திங்கள்சந்தை அருகே உள்ள செட்டியார்மடம் அரசு தொடக்கப்பள்ளியிலும், தொடர்ந்து மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியிலும் பயின்றேன்.
பின்னர் நடுநிலை, உயர்நிலை கல்விகளை மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் கற்றேன். தொடர்ந்து மேல்நிலைக் கல்வி கணித பிரிவை பாபுஜி மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.
இதில் 10-ம் வகுப்பு இறுதி தேர்வில் பள்ளியின் 2-ம் மாணவனாக தேர்ச்சி பெற்றதோடு, தமிழ் பாடத்தில் முதல் மாணவனாக வந்தேன். சிறுவயது முதல் தமிழ் மீது மிகுந்த ஆர்வமும், பற்றும் இருந்து வருகிறது.
12-ம் வகுப்பில் அதிக போட்டிகள் இருந்ததால் மதிப்பெண் பெரிய அளவில் பெறமுடியாவிட்டாலும், சற்று ஆறுதலான மதிப்பெண்களை பெற்றேன். அதே வேளையில், உடனடியாக கல்லூரியில் சேரமுடியவில்லை. காரணம் குடும்ப சூழல்.
பின்னர் வேலை பார்த்துக்கொண்டே கல்வி கற்க முற்பட்டேன். அதன்படி மணவாளக்குறிச்சியின் பெரிய நிறுவனமாக “பாம்பே டெக்ஸ்” என்ற துணி விற்பனை கடையில் விரபனையாளராக சேர்ந்தேன்.
தொடர்ந்து “ஜாண் வீடியோ & ஸ்டுடியோ” என்ற ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு தான் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ துவங்கின. அதன்படி முதலில் கம்பியூட்டர் கல்வி பயில் வாய்ப்பு கிடைத்தது. அதை கற்க நேரமும், ஊக்கமும் தந்தது, ஜாண் ஸ்டுடியோ உரிமையாளர் அண்ணன் ஜாண் ஜார்ஜ் பென்சிகர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் மற்ற முதலாளிகள் போல் அவர் இல்லை. இன்றளவும் ஒரு அண்ணனாக, நண்பராக, ஆலோசகராக இருந்து வருகிறார்.
பின்னர் காரைக்குடி அழகப்பா செட்டியார் பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை நிர்வாகயியலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் முதுகலை வரலாற்று பாடமும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை வணிகவியல் பட்டமும், தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வியல் நிறைஞர் கல்வியும் கற்றேன்.
இதற்கிடையில், கணினியில் முதுநிலை பட்டயமும், வேளாண்மையியல், கிறிஸ்தவ கல்வி, அஸ்ட்ராலஜி, மெஸ்மெரிசம் மற்றும் ஹிப்னாட்டிசம் உள்ளிட்ட பல சான்றிதழ்களையும் பயின்றேன்.
இந்த Blog மூலம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான, மகிழ்ச்சியான, மனவேதனையான, துரோகத்தால் ஏமாற்றப்பட்டு வீழ்ந்த நிகழ்வுகள், போட்டி பொறாமைகள், குடும்ப ஏமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கதை வடிவில், ஒவ்வொரு பகுதியாக எழுத முற்பட்டுள்ளேன்.
கதைகள் அனைத்தும் மையக்கரு உண்மையினை தாங்கியதாக இருக்கும். பெயர்கள் அனைத்தும் மெதுவான பெயர்களை கொண்டிருக்கும். “செந்தில்” என்ற பெயரிலேயே எழுதுகிறேன். ஏனெனில் எனக்கு இந்த பெயர் மிகவும் பிடிக்கும்.
இதில் யாரையும் குறிப்பிட்டு, அவர்களை காயம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு கதைகள் இருக்காது. பெயர்கள், இடங்கள் மாறுபடலாம். கரு மாறாது. ஒருவேளை படிக்கும் சம்பந்தப்பட்டவருக்கு, தான் எனதெரியலாம், அல்லது தெரியாமல் கூட போகலாம். ஏனென்றால், எந்தவொரு நிகழ்வுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும். அந்த வலியை ஏற்படுத்தியவர்களுக்கு, அதன் தாக்கம் இருக்காது, அதை மறந்துகூட போகலாம்.
நான், என்னை இங்கு உத்தமனாக காட்ட முற்படவில்லை. என்மீதும் பல விமர்சனங்கள், கோபங்கள் இருக்கலாம். அவர்கள் பார்வையில் அதையும் எழுதுகிறேன்.
அதைத்தும் கதை வடிவில்... விரைவில்...
அன்புடன் எம்மெஸ்...
மணவாளக்குறிச்சி
குமரி மாவட்டம்
+91 94887 44622 | +91 99448 40171 | bixton.ug@gmail.com